என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிச்சதே அவர்தான்.. அஜித் பட நடிகர் வேதனை..!
Author: Vignesh22 December 2023, 6:06 pm
நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படம் வெளியானது. இந்த படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பாலா. இவர் 2010 ஆம் ஆண்டு பாடகியான அம்ருத்தா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2019 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்தை பெற்றனர். அதன் பின்னர், அமிர்தா சுரேஷ் இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், நடிகர் பாலா முதல் மனைவியை பிரிந்தது குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் அவரை விவாகரத்து செய்ததும் உண்மை தான். ஆனால், இதற்கு காரணமாக இருந்து இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான். சில விஷயங்களை பொது இடத்தில் பகிர்வதில் தனக்கு விருப்பம் இல்லை. உண்மைகளை பேசினால் அது தனது மகனின் எதிர்காலத்தை பாதிக்கும். என்னுடைய மகளை பார்க்க கூட தர மாட்டார்கள் என்று பாலா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.