நான் வளர்ந்து வந்த நேரத்தில் ஜெயம் ரவி உள்ள புகுந்து கெடுத்துவிட்டார் – நடிகர் பரத் வருத்தம்!

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் மிகச்சிறந்த நடிகராக ஒரு சில ஹிட் படங்களில் நடித்து பின்னர் புது புது நடிகர்களின் வரவாலும். வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தாலும் சினிமாவை விட்டு அட்ரஸே இல்லாமல் போனவர்கள் பல பேர் உண்டு. அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகர் பரத்.

இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தார். தமிழில் 2003ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு செல்லமே, காதல், பிப்ரவரி 14, எம் மகன், வெயில், பழனி, நேபாளி, கோ, ஐந்து ஐந்து ஐந்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹிட் ஹீரோவாக புகழ் பெற்ற பரத் பின்னர் அடுத்தடுத்த பட தோல்வியால் மார்க்கெட் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்து வந்தார்.

அதன் பின்னர் ஜெஸ்லி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர். தற்போது பரத் ” love” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்போது பேசிய நடிகர் பரத்…. எனது தொழில் சறுக்கலுக்கு முழு முழுக்க நானே தான் காரணம். குறிப்பாக நேபாளி படத்தில் நிறைய படுக்கையறை காட்சிகள் இருக்கும். அந்த படம் A சான்றிதழ் படமாக வந்திருக்க கூடாது. அப்படி கொடுத்ததால் பேமிலி ஆடியன்ஸ் யாரும் படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை. எனவே தியேட்டர் வரை மக்கள் வந்தும் A சான்றிதழ் என்றதும் வேற படத்திற்கு போய்விட்டார்கள்.

நேபாளி படம் வெளியான சமயத்தில் ஜெயம் ரவியின் சம்திங் சம்திங் படம் வெளியாகியிருந்தது. அந்த படம் U சான்றிதழ் படம் எனவே கூட்டம் கூட்டமாக அந்த படத்திற்கு தான் மக்கள் சென்றார்கள். எனவே அந்த பெருந்தோல்வி அடைந்தது. அது தான் எனக்கு சினிமா கெரியரின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என பரத் வருத்தப்பட்டு நேபாளி படத்தின் இயக்குனர் மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்தினார்.

Ramya Shree

Recent Posts

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

58 minutes ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

60 minutes ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

2 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

4 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

4 hours ago

This website uses cookies.