காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்.. வருத்தப்பட்ட விஜய் டிவி பிரபலம்..!

Author: Vignesh
23 January 2024, 10:23 am

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

sivakarthikeyan

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து இந்த பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகியது. படம் குறித்து நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் வசூலில் அயலான் திரைப்படம் பட்டய கிளப்பி வருகிறது.

sivakarthikeyan-updatenews360

இந்நிலையில், சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார் பிளாக் பாண்டி அப்போது சிவகார்த்திகேயனுடன் பழகிய உரிமையில் சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூறியுள்ளார். ஆனால், பிளாக் பாண்டி கண்டுகொள்ளாமல் போனதாகவும், பின்னர் அவரது மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பியதாகவும், பாண்டி கூறியுள்ளார்.

black pandi

இது தனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரிடம் ஏதாவது நடிக்க வாய்ப்பு இருந்தால் கேட்கலாம் என நினைத்தேன். எனக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு அப்படி இருக்கும்போது எனக்கு பணம் எதுக்கு என்பதால் சிவகார்த்திகேயன் மேனேஜரிடம் கொடுத்த தொகையை வாங்கவில்லை. ஆனால், சிவகார்த்திகேயனின் மேனேஜர் அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை என சோகமாக ப்ளாக் பாண்டி தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 288

    0

    0