நன்றியை மறந்த அஜித்.. சினிமா வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் கண்கலங்கிய போண்டா மணி..!

Author: Vignesh
21 March 2023, 11:31 am

தமிழ் சினிமாவில் நடிகர் போண்டா மணி நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர். நடிகர் போண்டா மணி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து உள்ளார்.

குறிப்பாக வடிவேலு படங்களில் தான் நடிகர் போண்டா மணி அதிகம் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திரையுலகத்தினரிடம் தனது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வீடியோக்கள் மூலம் கோரிக்கையும் வைத்தது குறிப்பிடத்தக்கது.

bonda mani -updatenews360

மேலும், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் போண்டா மணி பேசியதாவது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், விஜய் சேதுபதி, தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தனக்கு உதவியதாகவும், ஆனால் வடிவேலு மற்றும் அஜித் எட்டி கூட பார்க்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

bonda mani -updatenews360

மேலும், நடிகர் போண்டா மணி அஜித்துக்கு ஆரம்பத்தில் பல உதவிகள் செய்ததாகவும், அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததே நான் தான் என்றும், மைனர் மாப்பிள்ளை என்ற படத்தில் வாங்கிக்கொடுத்தேன் அந்த நன்றியை கூட நினைத்து பார்க்கவில்லை என்றும், எவ்வளவோ தகவல் கொடுத்தேன் Help கேட்டு ஆனால் கடைசி வரை அவர் Help பண்ணவில்லை என்று கண்கலங்கினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1116

    8

    6