தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்திலிருந்து வந்த நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய ஊதியம் , கேரியர் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு மக்களுக்காக அரசியலில் இறங்கி இருக்கிறார் .
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாடாக நேற்று மிகப்பெரிய அளவில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார்.
அந்த மாநாட்டில் விஜய் பேசிய வார்த்தைகள் மற்றும் அவரது அரசியல் நோக்கம் மற்றும் கொள்கைகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படியான சமயத்தில் மக்கள் பலரும் விஜய்யின் அரசியல் வருகை மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு நிச்சயம் எங்களது ஓட்டு என கூறிவரும் சமயத்தில் பிரபல நடிகராக இருந்து வரும் போஸ் வெங்கட் அவர்கள் தனது twitter பக்கத்தில் விஜய்யை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார்.
அது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது… யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. என கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்:
அவரின் இந்த பதிவை பார்த்த விஜய்யின் தொண்டர்கள் பயங்கரமாக அவரை விமர்சித்தும் திட்டி தீர்த்தும் வருகிறார்கள். முன்னதாக இதே போஸ் வெங்கட் தான் நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தற்போது விஜய் அரசியலில் இறங்கி இருக்கும் பட்சத்தில் அவரது அரசியல் பயணத்தை மோசமாக விமர்சித்திருக்கிறார். அவருக்கு ஏன் விஜய் மீது இவ்வளவு வெறுப்பு? என்பது தெரியவில்லை என பலரும் கேள்வி எழுப்பி திட்டி வருகிறார்கள்.
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁
— Bose Venkat (@DirectorBose) October 27, 2024