உனக்கே அநியாயமா தெரியல? அந்த நடிகை தான் வேணும் – அடம்பிடித்து காரியத்தை சாதித்த 68 வயது மூத்த நடிகர்!
Author: Shree9 September 2023, 2:58 pm
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சூப்பர் சிரஞ்சீவி 68 வயதாகியும் இன்னும் மாசான கதைகொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக இவரது படங்களுக்கு இளம் ஹீரோயின்களை போட்டு அவர்களுடன் வயதிற்கு மீறிய ரொமன்ஸ் செய்து கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி வருவார்.
இவர் தொடர்ந்து சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தொடர் தோல்விகளை கொடுத்து வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அடைந்து வருகிறார். கடைசியா அஜித் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் கில் நடித்து அட்டர் பிளாப் கொடுத்துவிட்டார்.
அந்த நஷ்டத்தில் இருந்து இன்னும் தயாரிப்பாளர் மீளவில்லை. ஆனால் அதற்குள் தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆம், சிரஞ்சீவி தற்போது 157வது படத்திற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் இளம் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க உள்ளாராம். 37 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் சிரஞ்சீவியை நெட்டிசன்ஸ் கிண்டலத்து ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.