ஒரிஜினல் KGF சுரங்கத்தில் தயாராகும் சீயான் 61.. உலகநாயகனுடன் கைக்கோர்க்கும் பா ரஞ்சித்.. வெளியான அப்டேட் !

Author: Rajesh
17 July 2022, 2:56 pm

சீயான் விக்ரம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக முக்கிய வேடத்தில் நடித்த வருகிறார். இதற்கிடையே கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பை துவங்கிய இந்த படம் கொரோனா பரவல் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது திரைக்கு வர தயாராக உள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. கே ஜி எஃப் நாயகி ஸ்ரீ நிதி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இதற்கிடையே உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த விக்ரம் முன்னதாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கோப்ரா ஆடியோ லான்ச் விழாவிலாவது விக்ரம் என்ட்ரி கொடுப்பாரா? என்கிற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த வேலைகள் மாஸாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் விக்ரம்.

இந்நிலைகள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் விக்ரம். முன்னதாக பா ரஞ்சித்துடன் விக்ரம் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. சீயான் 61 என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் பூஜை நடக்கும் நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்ஸ் ட்விட்டரில் நேரலை செய்திருந்தது.

இந்த படத்திற்கு பா ரஞ்சத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளராக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்த முறை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சீயான் 61 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணி எனக்கு கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரிஜினல் கேஜிஎப் சுரங்கத்தில் நடத்த குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த சீயான் 61 முப்பரிமாணத்தில் வெளியாகும் என்றும் தகவல் சொல்கிறது. பட பூஜையின் போது இந்த படத்தை அடுத்து கமலின் படத்தை இயக்க உள்ளதாக பா ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கமலஹாசனின் பிறந்தநாள் அன்று தனது திட்டத்திற்கான ஒன்லைனை கூறிவிட்டார் இயக்குனர். எனவே சீயான் படம் முடித்த கையோடு கமலின் படத்தை இயக்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 697

    2

    0