நான் யார்னு தெரியுமா?.. மேடையில் அலப்பறை செய்த கூல் சுரேஷ்..!
Author: Vignesh10 August 2024, 4:32 pm
சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவாரா படத்தின் டிரைலர் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சத்யராஜ் விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் படத்தில் நடித்துள்ள கூழ் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, மேடையில் பேசிய கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொல்.திருமாவளவன் தான் தொகுத்து வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில், என்னை மேடைக்கு அழைத்த தொகுப்பாளனி கூல் சுரேஷ் அவர்களை பேச அழைக்கிறோம் என வரவேற்றார்.
மேடைக்கு பேச வந்த கூல் சுரேஷ் தொகுப்பாளனிடம் உங்களது பெயர் என்ன என கேட்டு தெரிந்து கொண்டு, நீங்கள் கூல் சுரேஷ் அவர்கள் பேசுவார்கள் என சாதாரணமாக கூறிவிட்டீர்கள். அடுத்த முறை, கூப்பிடும்போது யூட்யூப் சூப்பர் ஸ்டார், வெள்ளிக்கிழமை நாயகன், சிஎஸ்கே கட்சியின் தலைவர் கூல் சுரேஷ் கட்சியின் தலைவர் நடிகருமான கூல் சுரேஷ் அவர்களை பேச அழைக்கிறோம் என சொல்லி கூப்பிடுங்கள்.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால் மேடையில் பெரிய தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களுடன், எனக்கு இதற்கு முன் அறிமுகம் இல்லை. இந்த நேரத்தில், அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனென்றால், பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதற்காக கூறினேன் என்று பேசி இருந்தார்.