விருதை புறக்கணித்த டெல்லி கணேஷ்:மேடையில் நடந்த அதிர்ச்சி செயல்..!

Author: Selvan
11 November 2024, 4:31 pm

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று அவரது இல்லத்தில் உடல் நிலை சரியில்லாமல் காலம் ஆனார்.

இவர் 1976 ஆம் ஆண்டு வெளியான “பட்டினபிரவேஷம்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.காமெடி, குணச்சித்திரம், வில்லன் என தன்னுடைய இறுதி மூச்சு வரை பன்முக நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தார்.

இவருக்கு சரியான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என பலரும் வேதனைப்பட்டது உண்டு. இதை அவரே ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் மனம் விட்டு சொல்லி இருப்பார்.


விருது நிகழ்ச்சி

ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் டெல்லி கணேஷுக்கு நகைச்சுவை நடிப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

delhi ganesh award

அப்போது பேசிய டெல்லி கணேஷ் என்னைப் போன்ற குணச்சித்திர நடிகர்களை தமிழ் சினிமாவில் யாரும் பெரிதாக மதிப்பதில்லை. மற்ற மொழி மாநிலங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கின்றனர் . ஆனால் இங்கே எங்களுக்கு விருதும் கொடுப்பதில்லை, ஒரு விழாவிற்கும் அழைப்பதில்லை.

இதையும் படியுங்க: கதையை திருடிய கமல் ஹாசன்.. ஹிட் ஆன திரைப்படம்…!

சினிமாவில் ஏதாவது விழா நடந்தால் கூட டிவியில் பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன். ஏனென்றால் யாரும் என்னை எந்த விழாவிற்கும் கூப்பிடுவதில்லை.. எனக்கு கிடைத்த முதல் விருது இதுதான். இதுவே கடைசி விருதாக இருக்கட்டும் .இனி யார் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.யார் எந்த விழாவுக்கு அழைத்தாலும் போக மாட்டேன்’ என ஆதங்கத்துடன் பேசி இருப்பார்.

டெல்லி கணேஷ் வாங்கிய விருதுகள்

1979-ம் ஆண்டு பசி திரைப்படத்திற்காக “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது டெல்லி கணேஷுக்கு வழங்கப்பட்டது . அதன்பின் 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது“ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவருக்கு எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Close menu