நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா… பிரம்மாண்ட வசூல் – தனுஷுக்கு மாலை அணிவித்து பாராட்டிய தயாரிப்பாளர்!

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தாண்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் Mission : Chapter 1 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியா விடுதலை ஆகும் முன்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களுக்கு நடந்த போர் குறித்து பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை பார்க்கும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் ரொம்பவே இளமையாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் மேலும் இன்னும் இரண்டு கெட்டப்கள் ஆக்‌ஷனில் தெறிக்கும் என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதையே தனது லட்சியமாக கொண்டுள்ள தனுஷ், அதில் சேர்ந்த பின்னர் அவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் “கேப்டன் மில்லர்” படத்தின் கதை.

பிரிட்டிஷ் ராணுவம் இந்திய மக்களை சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளூர் மக்களுக்காக புரட்சியில் களமிறங்கும் தனுஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.கடைசி 30 நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் தெறிக்கவிட்டுள்ளதாம். இதுவரை பார்த்திராத தனுஷை இந்த படத்தில் நிச்சயம் பார்க்கலாம் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். நடிகை பிரியங்கா மோகனின் கதை மிகவும் போல்டாக உள்ளதாம்.

இருந்தாலும் கேப்டன் முள்ளாய் காட்டிலும் மக்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை மேலும் மகிழ்ச்சியாக கொண்டாடும்படி சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் கலகலப்பான படமாக உள்ளதால் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தியேட்டருக்கு படையெடுக்க வைத்துள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படம் முதல் நாளிலே ரூ.14 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனத்தின் TG தியாகராஜன் தனுஷுக்கு மாலை போட்டு பாராட்டி படத்திற்கு ப்ளாக் பஸ்டர் ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

1 hour ago

வெளியே வந்ததும் உன்னை கொன்னிடுவேன்… நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்!

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…

1 hour ago

குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!

களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…

2 hours ago

பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!

நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…

3 hours ago

ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…

4 hours ago

சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?

சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.