“அவ்வளவு டார்ச்சர்”.. தனுஷ் ரொம்ப பயப்படுவார்.. ரகசியங்களை உடைத்த தங்கை..!

Author: Vignesh
28 January 2023, 12:30 pm

7ஜி ரெய்ன்போ காலணி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை போன்ற வெற்றிப்படங்களை கொண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி வருபவர் இயக்குனர் செல்வராகவன்.

dhanush - updatenews360

செல்வராகவன் தன் இயக்கத்தில் தம்பி நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தி உச்சமடையச்செய்தவர். நானே வருவேன் படத்தின் மூலம் 11 வருடம் கழித்து தனுஷுடன் இணைந்து படத்தினை எடுத்து வெளியிட்டார்.

Naane-Varuven-updatenews360 1.jpg 2

நானே வருவேன் படம் 29-ஆம் தேதி செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வெளியானது. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் வசூலில் அடிவாங்கியது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் என்பதும், செல்வராகவனின் தம்பி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

dhanush - updatenews360

ஆனால் நடிகர் தனுஷின், தங்கையை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவர், மருத்துவத்துறையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தனது சகோதரர்கள் குறித்த உண்மையை ஒரு இவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

dhanush - updatenews360

அதாவது தனுஷ் சிறுவயதில், அவர் அண்ணன் செல்வராகவனுக்கு ரொம்ப பயப்படுவாராம். மேலும், செல்வராகவன் எடுத்ததற்கெல்லாம் அவரை வந்து பேனை போடு, பிஸ்கட் பாக்கெட் எடுத்துட்டு வா என அவரை அடிக்கடி மிரட்டியும் வேலை வாங்குவாராம். அவரும் சலிக்காமல் செல்வராகவன் சொன்னதை எல்லாம் செய்வாராம்.

dhanush - updatenews360

செல்வராகவன் செய்வதை எல்லாம் பார்த்தால் தனக்கே கடுப்பாக வரும் என்றும், ஆனால் தனுஷ் அண்ணனுக்காக இதையெல்லாம் முகம் சுளிக்காமல் அப்போதே செய்வார் என்றும், அந்த சின்ன வயசுல அவரது பொறுமை எங்களுக்கு ரொம்ப புடிக்கும் என தனுஷ் குறித்து சிறுவயதில் நடந்த முக்கியமான விஷயங்களை காமெடியாக ஒரு பேட்டியில் தனுஷின் தங்கை தெரிவித்துள்ளார்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu