பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் .. முதன்முறையாக வெளியான தனுஷ் கட்டிய வீட்டின் Home Tour வீடியோ.!

Author: Vignesh
25 March 2023, 4:00 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

dhanush - updatenews360 4

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது. ரஜினிகாந்த் வசித்து வரும் அதே போயஸ் கார்டனில் தனுஷ் திடீரென இத்தனை கோடிகள் செலவு செய்து வீடு கட்டியதற்கு காரணம் என்ன என்று பலரின் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் மருமகனான தனுஷின் தந்தை மற்றும் தாய் இருவரையும் இரண்டாம் தரத்தில் வைத்து நடத்தியது தான் இந்த திடீர் முடிவிற்கான காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, ரஜினிகாந்த் மீது தனுஷுக்கு சில வருத்தங்கள் உண்டானதாகவும் சொல்லப்படுகிறது.

எல்லா பேட்டிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தவறாது தனது பெற்றோர் குறித்து புகழ்ந்தும் நெகிழ்ந்து பேசும் தனுஷ், ரஜினிகாந்திற்கு இணையாக அதே இடத்தில வீடு கட்டவேண்டும் என்று முடிவு செய்து தான் இந்த பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார்.

இதனிடையே, தனுஷின் புதிய வீட்டின் பேச்சு மக்களிடம் அதிகம் இருந்து வருகிறது. ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டன் ஏரியாவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அவரது வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 470

    1

    0