ஆளே மாறிப்போன தனுஷ் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Rajesh
9 April 2022, 6:19 pm

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனுஷ்-ஐஸ்வர்யாவின் உறவு முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், உண்மையான காரணம் என்ன..? என்பது இதுவரையில் இருவரும் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எளிய மக்களின் வலியை சொன்ன திரைபடம் தான் கர்ண்ன் . இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி ருசித்தது. இந்த படம் வெளியாகி 1 வருடம் கடந்த விட்டது.

அது குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என தங்களது சமூக வலைதளங்களில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக மாரிசெல்வராஜ், நடிகர் தனுஷ்க்கு வாள் ஏந்தி நிற்கும் வீரரின் சிலையை பரிசளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்கில் தனுஷ் வேறு மாதிரியான கெட்டப்பில் இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!