மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. பள்ளி நண்பர்களுடன் தனுஷ் – வைரலாகும் Reunion போட்டோ இதோ!

Author: Shree
14 August 2023, 7:14 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்த படமான 50 படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் தன்னுடைய பள்ளி நண்பர்களை சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது. தன்னுடன் படித்த சுமார் 25 பேருடன் இந்த ரீயூனியன் சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…