நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியும், கைகளில் சூடம் ஏற்றியும் ரசிகர்கள் உற்சாகமுடன் திரைப்படத்தை கண்டு ரசித்தினர்.
இயக்குனர் வெங்கி அட்லூரியா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபல தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் தனுஷ் ரசிகர்கள் வாத்தி திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.
திட்டமிட்டபடி இன்று அதிகாலை முதல் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகமுடன் வாத்தி திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். அந்த வகையில் நெல்லை சந்திப்பு ராம், முத்து ராம் திரையரங்கில் குவிந்த தனுஷ் ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் தனுஷ் கட்டவுட் வைத்திருந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த தனுஷ் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் ஊற்றி உற்சாகம் அடைந்தனர். பின்னர் ரசிகர் ஒருவர் தனது கைகளில் சூடம் ஏற்றி, அதை தனுஷ் உருவத்திற்கு காண்பித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாத்தி திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.