தனுஷின் நானே வருவேன் புதிய அப்டேட் – shock கொடுத்த செல்வராகவன்..!

Author: Rajesh
11 February 2022, 12:51 pm

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்ய புவனா சுந்தர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில், படக்குழு மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?