பங்களா வீட்டில் மனைவி இல்லாமல் தனிமையில் பொங்கல் கொண்டாடிய தனுஷ்!

Author: Rajesh
15 January 2024, 8:01 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

dhanush

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இருவரும் அவரவர் வேளையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் புதிதாக கட்டி குடியேறிய தனது பங்களா வீட்டில் மனைவி உடன் இல்லாமல் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் உடன் மட்டும் பொங்கல் தினத்தை கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட எல்லோரும் மனைவி உடன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!