திருவும், ஷோபனாவும் ரொம்ப ஸ்பெஷல்.. நடிகர் தனுஷின் நெகிழ்ச்சி பதிவு ..!

Author: Vignesh
13 August 2024, 6:05 pm

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் நடிப்பில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக வெளியானது திருச்சிற்றம்பலம். இந்த படம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை மித்ரன் ஆர் ஜவகர் எழுதியிருந்தார்.

மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில், தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, அந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தன் உயிர் தோழியை காதலித்து தனுஷ் இந்த படத்தில் திருமணம் செய்து கொள்வார். இந்த படம் வாழ்க்கையுடன் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது என்றே சொல்லலாம். மேலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக, நித்யா மேனனை குறிப்பிட்டு தாய் கிழவி என வரும் கலாட்டாவான நகைச்சுவை பாடல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து, தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிலிம் பேர் விருதுகள் கிடைத்துள்ளது. அது குறித்து நடிகர் தனுஷ் ஒரு நெகழ்ச்சி பதிவினை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு படத்திற்காக ஹீரோவும் ஹீரோயினும் இணைந்து ஒரே நேரத்தில் சிறந்த நடிகர் நடிகைக்கான விருதை பெறுவது என்பது பெரிய விஷயம் எனவும், திருவும் சோபனாவும் ரொம்ப ஸ்பெஷல் என்றும் திருவை அழகாக காட்டியதற்கு மிகவும் நன்றி ஷோபனா என்று அந்த பதிவில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!