துல்கர் சல்மான் வீட்டில் ஒருவர் தற்போது மரணமடைந்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவை போல மலையாள சினிமாவில் கூட வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து. பின் இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து மூலம் இந்த மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார். அந்த படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல இவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஹே சினாமிகா’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
இப்படி பல தமிழில் நடித்த படங்கள் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் துல்கர் நடிப்பில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் சல்யூட். இந்த படத்தை வே பாரர் பிலிம்ஸ்- துல்கர் சல்மான் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதா ராமம் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழியில் பெரிய ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது சென்னையில் உள்ள கீரன் வேஸ் சாலையில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது குழந்தைகளுடன் அழைத்து செல்லும் வட பழனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தற்போது உயிரிழந்திருக்கிறார் என்ற தகவல கிடைத்துள்ளது.
பாஸ்கர் துல்கர் சல்மானை காலையில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதினால் இரவு துல்கர் சல்மான் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் இரவு உணவிற்கு பாஸ்கரன் பீசா மற்றும் கூல்ட்ரிங் சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மாரடைப்பு ஏற்பட்டு பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து இறந்தவரின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது .மேலும் இவர் மரணம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.