“பாக்கியலட்சுமி” சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்- இனி இவருக்கு பதில் இவர் தான்..!

Author: Vignesh
13 December 2023, 4:45 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

bhagyalakshmi -updatenews360 2

இப்போது கதையில் ஜெனி செழியனை பிரிந்து அவரது அம்மா வீட்டில் இருக்க அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என தெரியவில்லை. இதற்கு இடையில், பாக்கியாவுக்கு கவர்மெண்ட் காண்ட்ராக்ட் கிடைக்க அதில் ஒரு புதிய பிரச்சினையை சந்தித்திருக்கிறார். அதாவது காண்டாக்ட் கிடைக்காத ஒருவர் பாக்கியா மீது பழி போடுகிறார். ஆனால், அந்த பிரச்சினையை எதிர்கொண்டு வெற்றி காண்கிறார் பாக்கியா. இன்றைய எபிசோடில் பழைய நடிகருக்கு பதிலாக புதிய பிரபலம் ஒருவர் நடிக்க வருகிறார். அதாவது, ஜெனியின் அப்பாவாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் கதாநாயகர்களின் அப்பாவாக நடித்தவர் தான் தற்போது ஜெனியின் அப்பாவாக நடிக்க வந்துள்ளார்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!