போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2025, 3:34 pm
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படியுங்க: விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்
அந்த சமயத்தில் அந்த ஓட்டலில் தங்கி இருந்த கேரள மாநில பிரபல சினிமா நடிகர் சைன் டோம் சாக்கோ மூன்றாவது மாடியில் இருந்து வேக வேகமாக தப்பி செல்லக்கூடிய சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போதை தடுப்பு போலீசார் ஹோட்டலில் தீவிர சோதனை நடத்திக் கொண்டிருந்த பொழுது நடிகர் எதற்காக தப்பி சென்றார் என்பது குறித்து விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இவரை பிடிப்பதற்காகவும் இது தொடர்பாக கேட்பதற்காகவும் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு தேடுதல் பணியில் போதை தடுப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போதைப் பொருள் ரெய்டு : நடிகர் தப்பியோடிய காட்சி!#trending | #Kerala | #ShineTomChacko | #Police | #drug | #viralvideo pic.twitter.com/KCmvZLvI9H
— UpdateNews360Tamil (@updatenewstamil) April 17, 2025
5 நட்சத்திர ஹோட்டலில் போதை தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது பிரபல நடிகர் வேகவேகமாக தப்பி செல்லக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
41 வயதான டாம் சாகோ, பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.