அவன் கஞ்ச பையன்.. டீ சாப்பிட்ட கூட 10 பைசா குடுக்க மாட்டான்.. டென்ஷன் ஆன கஞ்சா கருப்பு..!
Author: Vignesh6 January 2024, 12:15 pm
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
வடிவேலுவின் நிஜ வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், வடிவேலு மதுரைக்கு செல்லும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்ல மாட்டார் எனவும், இதற்கு குடும்பம் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை பெரும்பாலும், அழைத்துச் செல்வது இல்லையாம், வடிவேலு எப்போதும் சில நண்பர்களுடன் தனி பிளைட்டில் செல்வார் என சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிதாமகன் படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு அறிமுகமானார். அதன் பின்னர், பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். 2014இல் வேல்முருகன் போர்வெல் சென்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் சரியாக போகாத காரணத்தால், கஞ்சா கருப்பு தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் இழந்துவிட்டார். இந்நிலையில், பல்வேறு நடிகர்கள் பிரபலங்கள் வடிவேலு குறித்து, பேசிவரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்புவிடம், ஒரு காமெடி நடிகர் எவ்வளவு பணம் வந்தாலும், மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்.
சக நடிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், உதவ மாட்டார் என கூறுகிறார்கள். அது குறித்து, உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த, கஞ்சா கருப்பு நீங்க வடிவேலுவை தான சொல்றீங்க.. அவர் யாருக்கும் எப்பவும் கொடுக்க மாட்டார். ரொம்ப கஞ்சம், ரொம்ப நல்லவரு, அவர் கொடுக்காததுனால தான் வடிவேலு நல்லா இருக்காரு, நாம குடுக்குறதால தான் கெட்டுப் போயிருக்கும். அவர் என்னைக்குமே நல்லா இருப்பார் யாருக்கும் ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டார். டீ சாப்பிட்ட இடத்தில் கூட பத்து பைசா கொடுக்க மாட்டாரு, அதனாலதான் அவர் நல்லா இருக்காரு என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.