வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாக அப்படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் முதல் படத்திலே மக்கள் அனைவ்ருக்கும் பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார்.
அதன் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, தேவராட்டம், இந்திரஜித் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிதாக வரவேற்பு இல்லாததால் மார்க்கெட் இழந்தார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது அப்படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகனுடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் காதலாக மாறியது.
தொடர் பிளாப் படங்களை கொடுத்து தோல்வியடைந்த நேரத்தில் மஞ்சிமா மட்டும் தான் என்னுடன் இருந்தார். அது தான் எங்கள் காதல் வலுவடைய காரணமாக இருந்தது என பேட்டியில் கூறியிருந்தார் .இந்நிலையில் இவர் தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது கெளதம் கார்த்திக்கின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம கெளதம் கார்த்திக்கா இது? என வியந்து இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.