“என்னவொரு குசும்புத்தனம்”… தனக்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் போஸ் கொடுத்த பாலா பட நடிகர்..!

Author: Vignesh
22 March 2023, 3:30 pm

1986 ல் தமிழ் சினிமாவில் வெளியான அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தவர் ஜி எம் குமார்.

கதையாசிரியராகவும் திகழ்ந்து வரும் நடிகர் ஜி எம் குமார் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

g m kumar - updatenews360

குறிப்பாக இவர் நடித்த வெயில், குருவி, அவன் இவன், தாரைத்தப்பட்டை, கர்ணன், பொம்மை நாயகி, பல்லு படாம பாத்துக்க உள்ளிட்ட பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

இதனிடையே, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கருத்துக்களை கூறும் ஜி எம் குமார் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர், வரும் 2023 மே 1 ஆம் தேதி காலாமானார் என்று குறிப்பிட்டு இந்த போஸ்டரை வெயியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது. ஷூட்டிங்கில் ஜிஎம் குமார் பெயர் கரிய மாணிக்கம் என்று இருக்கிறது. கிடாக்குளம் கிராம மக்கள் போஸ்டர் ஒட்டியது போல் ஷுட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதை பார்த்த நெட்டிசன்கள் முன்கூட்டியே மரண அறிவிப்பு , யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

g m kumar - updatenews360

இன்னொரு பதிவில், பிணமாக படுத்தபடி, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னவொரு குசும்புத்தனம் என்று கூறிவருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 462

    0

    0