கவுண்டமணியின் மகளை பார்த்து இருக்கீங்களா? இப்படி ஒரு விஷயத்தை பண்ணிட்டு இருக்காங்க..!

Author: Vignesh
29 January 2024, 10:08 am

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள். தற்போது, எத்தனையோ காமெடி நடிகர்கள் பல காமெடிகளை செய்கிறார்கள். ஆனால், இவர்களின் காட்சியில் வரும் காமெடிகள் எப்போதும் மன மக்கள் மனதில் நிற்கும்.

goundamani-updatenews360

இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வாய்மை என்னும் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் எந்த ஒரு படத்திலும் கவுண்டமணி நடிக்கவில்லை. 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி இன்று மட்டுமல்ல என்றுமே நம் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை கவுண்டமணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். நடிகர் கவுண்டமணி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலானது.

goundamani-updatenews360

கவுண்டமணிக்கு சுமித்ரா, செல்வி என இருமகள்கள் உள்ளனர். தற்போது சுமித்ரா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கவுண்டமணியின் மகள் சுமித்ரா கடந்த சில ஆண்டுகளாகவே பொது சேவை செய்து வருகிறாராம். அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் இவர் தனது கணவருடன் இணைந்து சேவை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

goundamani daughter
  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 452

    0

    0