காலத்தால் அழிக்க முடியாத நடிகராக இருந்து வரும் நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவை பொருத்தவரை கவுண்டமணிக்கு முன் கவுண்டமணிக்கு பின் என்றுதான் நகைச்சுவை காட்சிகள் பிரித்துப் பார்க்கப்படும் .
அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர். நகைச்சுவை கலந்த நடிப்போடு கேலி, கிண்டல் உள்ளிட்டவற்றால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் கவுண்டமணி. பிரபல பிரபலமான நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .
அடுத்தவர்களை கலாய்த்து செய்த நகைச்சுவையின் மூலம் அறிமுகம் செய்தவர்தான் நடிகர் கவுண்டமணி. பயங்கரமாக கலாய்ப்பதில் கவுண்டமணியும் மிஞ்ச யாராலும் முடியாது. பல மூடநம்பிக்கைகளை உடைக்கும் வகையில் அவர் தன்னுடைய நகைச்சுவை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
கொடூரமான வில்லங்கங்களை கூட டம்மி ஆகி விடுவார். அந்த அளவுக்கு தன்னுடைய நகைச்சுவையாலே தனக்கான பலத்தை உருவாக்கி நிலை நிறுத்தியவர் கவுண்டமணி. இந்த நிலையில் கவுண்டமணியை குறித்து பிரபல நடிகர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
அதாவது சினிமாவுல நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருந்த காலத்துல ஒரு டீ பன்னுக்கே ரொம்ப கஷ்டப்பட்டவர் தான் கவுண்டமணி. அவர் நாடகத்தில் நடிச்சு 5 ரூபாய் சம்பளத்தை வாங்கிட்டு வந்து அதுல 2 ரூபாய் கூட இருக்குறவங்களுக்கு கொடுத்து உதவுவார் . அந்த அளவுக்கு நல்ல மனம் கொண்டவர் கவுண்டமணி என்று அவரை புகழ் பாராட்டி இருக்கிறார்.
அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்து தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரையும் கலாய்த்து தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை திரையில் கேலி கிண்டல் செய்து பயங்கரமாக கலாய்த்த நடிகர் கவுண்டமணிக்கு இவ்வளவு நல்ல குணம் இருக்கிறதா? என கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் வியந்து அவரை பாராட்டி வருகிறார்கள் .
இங்கே தான் ஒருத்தர் இருக்காரே வைகைப்புயல் என்று… வரவங்க பூரா அவரை கரிச்சி கொட்டுறாங்க… கூட நடிச்சவங்க பூரா அவருக்கு சாபம் விடுறாங்க என்றெல்லாம் கவுண்டமணியுடன் கம்பேர் பண்ணி வடிவேலுவை விமர்சித்து வருகிறார்கள்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.