டும்..டும்.. பொண்ணு இவங்க தான்.. Photo போட்டு கன்ஃபார்ம் செய்த ஹரிஷ் கல்யாண்..! ரசிகர்கள் வாழ்த்து..!

Author: Vignesh
5 October 2022, 5:17 pm

ஹரிஷ் கல்யாண் தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.
தமிழில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் 2010ல் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த ‘ப்யார் ப்ரேமா காதல்’,

‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹரீஷ். வருங்கால மனைவியின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், முழு மனதுடன், என் வாழ்நாள் முழுவதும்

??????? ??????????, வரப்போகும் மனைவியை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். லவ் யூ என்றும்,

கடவுளின் ஆசீர்வாதத்துடன், நாங்கள் என்றென்றும் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பான அன்பை எதிர்பார்க்கிறோம். என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?