இயக்குனர் மணிரத்னம் இந்திய நடிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேர் எடுத்தவர். மணிரத்னம் இயக்கிய பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு மணிரத்னம் படத்தில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று பலர் துடித்து வருகிறார்கள்.
அப்படி அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒரு நடிகர் தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் ஹிந்தி பக்கம் சென்று ஆளே தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளார்.
நடிகர் சித்தார்த் கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தார்த். இந்த படம் மக்கள் மத்தியில் பிடித்துப் போக அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.
பின்னர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை பெற்றார்.
இதன்பின் நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு என்று நடித்து வந்தார். அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். நடிகர் சித்தார்த் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சர்ச்சை கருத்துக்களை கூறி அவ்வப்போது பிரச்சனையிலும் சிக்குவார். தற்போது நடிகை அதிதி ராவ்-உடன் ரகசிய காதலில் இருந்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டுகிறது.
சமீபத்தில் சினிமாவில் வாய்ப்பில்லை என்றால் இதை விட்டு விலகவும் தயார் என்று கருத்து ஒன்றினை போட்டதோடு காதலியுடன் எங்கு ரகசியமாக சென்றாலும் புகைப்படம் எடுக்கவரும் கலைஞர்களை முரைத்து அவ்வப்போது வம்பிலும் மாட்டி கொள்கிறார்.
தற்போது பாலிவுட் சினிமாவையே நம்பி நடிகையுடன் மும்பையில் செட்டிலாகி வெளியில் தலைக்காட்டாமல் நடிகர் சித்தார்த் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
This website uses cookies.