விஜய் மகன் கதைக்கு NO சொல்லி எஸ்கேப்பாகும் டாப் ஹீரோக்கள்… டேக் ஆஃப் ஆகாமல் திணறும் சஞ்சய்..!

Author: Vignesh
15 May 2024, 8:00 pm

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் லைக்கா நிறுவனம் தறிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.

மேலும் படிக்க: அப்பா, அம்மா…. மிருணால் தாக்கூரின் அழகான குடும்ப புகைப்படம் இதோ..!

இந்நிலையில் விஜயின் தந்தை தொழில் ரீதியான சந்திப்பு ஒன்றில் தான் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்து பேரனுக்கு சான்ஸ் கொடுக்க சொல்லி கேட்டதாகவும் உடனே ஒப்புக்கொண்டதாம் லைக்கா நிறுவனம்.

முன்னதாக, விஜயின் துணையில்லாமல் சஞ்சய் தனது அறிமுக படத்தின் வாய்ப்பை கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதை போல், தனது மகனின் படத்தைப் பற்றி பொதுவெளியில் விஜயும் பேசுவது இல்லை. இந்நிலையில், சஞ்சய் இயக்கப் போகும் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும் படிக்க: டக்குனு இப்படி சொல்லுவாங்கன்னு நினைக்கல.. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்..!

ஆனால், கவின் போன்ற இளம் நடிகர்களின் பெயர் இந்த லிஸ்டில் அடிபட்டு வந்தது. தற்போது, வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தில், பல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில், படத்தின் பூஜை அறிவித்து ஒரு வருடமாகியும் கிணத்தில் போட்ட கல்லாக இப்படத்தின் அப்டேட் அப்படியே இருந்து வருகிறது. சில காரணங்களால் பேச்சுவார்த்தையோடு நின்று போனதாக கவின் தெரிவித்திருந்தார்.

vijay son

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

மேலும், நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. ஆனால், கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களிடம் சஞ்சய் கதை சொன்னது உண்மைதான் என்றாலும், சஞ்சயின் கதையில் சில விளக்கங்களுக்கு பதில் இல்லை என்றும், இவருக்கு இயக்கத்தில் பெரிய அனுபவம் இல்லை என்றும் இவருடைய இயக்கத்தில் நடிகர்கள் நடிக்க யாரும் முன் வரவில்லையாம். அதோடு, விஜய் சேதுபதியை வில்லனாக ஆசைப்பட்ட சஞ்சய் பிடியிலிருந்து அவரும் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

sanjay-updatenews360

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

மேலும் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீனை இசையமைக்க சஞ்சய்க்கு ஆசையாம். சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கரும் இதில், நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால், பிரபல நடிகர்கள் யாருமே இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாததால், படம் தற்போது வரை டேக் ஆஃப் ஆகாமல் அதே இடத்தில் நின்று வருகிறது. இதனால், லைக்காவும் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், இனிமேலாவது சஞ்சய் அப்டேட் கொடுப்பாரா என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 244

    0

    0