அந்த மனசு தாங்க எல்லாம்.. துணை நடிகையின் படிப்பு செலவை ஏற்ற நடிகர் ஜெய்.!
Author: Rajesh24 June 2022, 6:00 pm
களவாணி படத்தில் நடிகர் விமலின் தங்கையாக ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. பிரிவோம் சந்திப்போம், வைத்தீஸ்வரன், அழகு நிலையம், அன்பே வா, வஞ்சகன் ஆகிய படங்களிலும் மற்றும் சின்னத்திரை சீரியல் நிம்மதி, நாணயம், சவாரி, அகல்யா, காத்து, யாமிருக்க பயமேன் தொடர்களிலும் நடித்து பிரபலமான மனிஷா பிரியதர்ஷினி, தற்போது LLB இறுதி ஆண்டு முடித்துள்ளார், அதில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
தனது தாயின் கனவை நிறைவேற்ற அவர் கலெக்டராக சிவிஸ் சர்வீஸ் தேர்வு பயிற்சியில் இருக்கிறார். இதற்கான பயிற்சி கட்டணம் கட்ட முடியாமலும், புத்தகங்கள் வாங்க முடியாமலும் தவித்து வந்தார்.இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகர் ஜெய் மனிஷாவை அழைத்து அவரது ஆர்வத்தை பாராட்டி, அவருக்கான கல்வி செலவை ஏற்பதாக தெரிவித்தார். இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் மனீஷா.