பரிதாப நிலையில் ஜனகராஜ்… கொடிகட்டி பறந்த மனுஷன் சுயநினைவின்றி கிடக்கும் கொடுமை!

Author: Shree
21 June 2023, 8:30 pm

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான ஜனகராஜ் 80க்களில் பிஸியான மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த மக்கள் மாதத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்த இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு பெரும் போட்டியாக இருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராமல் அவரது முகம் விபத்துக்குள்ளாகி முக வாதம் நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் வாய் கோணையாகிவிட்டது. இதை பார்த்து பலரும் ” இந்த மூஞ்சியை வச்சிட்டு எப்புடி இனிமே படங்களில் நடிப்ப? என கிண்டலடித்தார்களாம்.

அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து முயற்சித்து திரைப்படங்களில் நடித்த அவர் கொஞ்சம் இழுத்து.. இழுத்து பேசி தனக்கென ஒரு தனி மாடுலேஷனையும், பாடி லாங்குவேஜையும் வரவைத்துக்கொண்டார். அதற்கு இன்னும் வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. இதனால் கேப் இல்லாமல் நடிக்கும் அளவிற்கு படவாய்ப்புகள் குவிந்தது.

இருந்தாலும் அவ்வப்போது அதை நினைத்து வருந்தவாரம். சில வருடங்களில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இதை கவனித்த இயக்குனர் பாரதிராஜா அவரை பார்த்துக்கொள்ள தனது உதவி இயக்குனர் ஒருவரை அனுப்பினாராம். அவர் ஸ்க்ரிப்ட் மற்றும் ஷூட்டிங்கில் வேலை செய்ததை விட கனகராஜுக்கு உதவி செய்தது தான் அதிகமாம். அந்த உதவி இயக்குனர் வேறு யாரும் அல்ல நடிகர் மனோபாலா தான்.

இந்நிலையில் தற்போது வயது முதிர்ச்சி அடைய அவரால் நோயில் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார். பின்னர் ஜனகராஜுன் முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் டிரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். கடைசியாக ஜனகராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Trisha emotional Instagram post நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
  • Views: - 1258

    6

    2