தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான ஜனகராஜ் 80க்களில் பிஸியான மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த மக்கள் மாதத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்த இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு பெரும் போட்டியாக இருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராமல் அவரது முகம் விபத்துக்குள்ளாகி முக வாதம் நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் வாய் கோணையாகிவிட்டது. இதை பார்த்து பலரும் ” இந்த மூஞ்சியை வச்சிட்டு எப்புடி இனிமே படங்களில் நடிப்ப? என கிண்டலடித்தார்களாம்.
அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து முயற்சித்து திரைப்படங்களில் நடித்த அவர் கொஞ்சம் இழுத்து.. இழுத்து பேசி தனக்கென ஒரு தனி மாடுலேஷனையும், பாடி லாங்குவேஜையும் வரவைத்துக்கொண்டார். அதற்கு இன்னும் வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. இதனால் கேப் இல்லாமல் நடிக்கும் அளவிற்கு படவாய்ப்புகள் குவிந்தது.
இருந்தாலும் அவ்வப்போது அதை நினைத்து வருந்தவாரம். சில வருடங்களில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இதை கவனித்த இயக்குனர் பாரதிராஜா அவரை பார்த்துக்கொள்ள தனது உதவி இயக்குனர் ஒருவரை அனுப்பினாராம். அவர் ஸ்க்ரிப்ட் மற்றும் ஷூட்டிங்கில் வேலை செய்ததை விட கனகராஜுக்கு உதவி செய்தது தான் அதிகமாம். அந்த உதவி இயக்குனர் வேறு யாரும் அல்ல நடிகர் மனோபாலா தான்.
இந்நிலையில் தற்போது வயது முதிர்ச்சி அடைய அவரால் நோயில் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார். பின்னர் ஜனகராஜுன் முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் டிரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். கடைசியாக ஜனகராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜனகராஜ், நம்ம என்னதான் பர்பாமன்ஸ் கொடுத்தாலும், கமலின் ரியாக்ஷன் ஜஸ்ட் சிரிப்பா மட்டும்தான் இருக்கும். ஆனால் பல நேரங்களில் நடிப்பில் சில மாறுதல்களையும் அவர் செய்வார். ரஜினி வாய் நிறைய பாராட்டுவார். மேலும், சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்த பின்தான் என்னுடைய சம்பளத்தை கேட்பேன்.
டப்பிங் முடித்த பின்னர் கேட்பதால், பல பேர் உடனடியாக பணத்தை தராமல் இழுத்து அடிக்கவும் செய்து இருக்கிறார்கள். சிலரிடம் உங்களை நம்பி தானே படத்தில் வேலை செய்தேன். இப்படி வேலை முடிந்ததும் இழுத்து அடிக்கலாமா என்று சம்பளத்திற்காக சண்டையும் போட்டிருக்கிறேன். சில தயாரிப்பாளர்கள் என்னை 40 முறை கூட சம்பளத்திற்காக அலைய வைத்திருக்கிறனர். சில படங்களுக்கு சம்பளமே வாங்காமலும் இருந்திருக்கிறேன் என்று ஜனகராஜ் பேசியுள்ளார்.
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
This website uses cookies.