இப்படி பேசினா கோபம் வருமா வராதா?.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அகராதியாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்..!
Author: Vignesh26 June 2024, 4:48 pm
தமிழ் சினிமாவில் 1994 ஆம் ஆண்டு வெளியான சரத்குமாரின் நாட்டாமை படத்தில் ஆமாம் நான் பார்த்தேன் என சாட்சி சொல்லும் சிறுவனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் மாஸ்டர் மகேந்திரன். அந்த படத்தை தொடர்ந்து, பாண்டியராஜனுடன் இணைந்து அவர் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே படம் அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு விருது பெற்று தந்தது.
பொதுவாக, தமிழ் சினிமாவில் பெண் குழந்தை நட்சத்திரங்களை பேபி என்றும் ஆண் குழந்தை நட்சத்திரங்களை மாஸ்டர் என்றும் அடைமொழி வைத்து அவர்களுக்கு உரிய மரியாதையை தமிழ் சினிமா அந்த காலத்தில் இருந்தே வழங்கி வந்தது. பரம்பரை, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மாப்பிள்ளை கவுண்டர், காதலா காதலா, கோபாலா கோபாலா உள்ளிட்ட பல படங்களில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து இருந்தார்.
பல வருட இடைவெளிக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு வெளியான விழா படத்திலிருந்து ஹீரோவாக நடித்து வந்தாலும், மாஸ்டர் மகேந்திரனுக்கு பெரிதாக படங்கள் ஓடவில்லை என்றுமே ஆனந்தம், விந்தை, திட்டிவாசல், விரைவில் இசை, நாடோடி கனவு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக அவர் விஜய் சேதுபதியின் வாலிப பருவ கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு சிதம்பரம் ரயில்வே கேட், நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் எதுவுமே பெரிதாக ஓடவில்லை வெப் சீரிஸிலும் மாஸ்டர் மகேந்திரன் வடசென்னை இளைஞராக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அதிக ஆபாச வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு இந்த வெப் சீரிஸ் பெரிதாக பிடிக்காமல் போய்விட்டது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாவா லக்ஷ்மணன் மாஸ்டர் மகேந்திரனின் ஷூட்டிங்கில் செய்த அகராதிதனத்தை பற்றி பேசியுள்ளார். மஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது ஷார்ட் எத்தனை வைப்பீங்க என்று கேட்டால், இயக்குனருக்கு கோபம் வருமா வராதா ஆமாங்க சூரியவம்சம் படத்தில் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க மாஸ்டர் மகேந்திரனை தான் அனுகியுள்ளனர். அப்போது, அவர் எனக்கு எத்தனை சாட் எங்கு வைப்பீர்கள் என கேட்க விக்ரமன் கோபத்தில் அவனை கூப்பிட்டு போங்க என்று சொல்லியதாக நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.