ஜெயம் ரவி இவ்வளவு மோசமானவரா? மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட கொடுமை!

Author: Shree
28 May 2023, 12:26 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி.

இதில் மோகன் ராஜா இயக்குனராகவும் ஜெயம் ரவி முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி தன் மனைவியின் பேச்சை கேட்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதனால் அவரின், அம்மா அப்பா மிகுந்த வேதனை அடைந்துவிட்டர்களாம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2873

    2

    5