யோகி பாபு தான் ஹீரோ… இயக்குனராக களமிறங்கும் நடிகர் ஜெயம் ரவி!

Author:
2 November 2024, 10:15 am

ஜெயம் ரவி நடிப்பில் இந்த தீபாவளி தினத்தின் ஸ்பெஷல் ஆக திரைக்கு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பிரதர். இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வசூல் ஈட்டி வருகிறது. நடிகர் ஜெயம் ரவி காதல் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு காமெடி கலங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி காட்டி பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக தொடர்ந்து சிறப்பாக நடத்து வந்தார்.

jeyam ravi 4

இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளிவந்த பிரதர் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்க இவர்களுடன் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் அக்கா தம்பி செண்டிமெண்ட் மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எம். ராஜேஷ் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் போட்டியாக வந்து தூள் கிளப்பி விட்டதால் பிரதர் திரைப்படம் பின்தங்கி விட்டதாக ரசிகர்கள் பரவலாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி இயக்குனராக களம் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதாவது தன்னிடம் மூன்று படங்களின் கதைகள் கைவசம் இருக்கிறது. இதில் முதல் யோகிபாபு உடன் இணைந்து ஒரு படத்தை இயக்கப்போகிறேன் என ஓப்பன் ஆக கூறி இருக்கிறார்.

yogi babu - updatenews360

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க யோகி பாபு ஓகே சொல்லிவிட்டதாகவும் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்க இருப்பதாகவும் கூட ஜெயம் ரவி தெரிவித்து இருக்கிறார். படத்திற்கு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் உடனடியாக சூட்டிங்கை துவங்கி விடலாம் என ஜெயம் ரவி தெரிவித்து இருக்கிறார் .

மனைவி விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் ஜெயம் ரவி கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி எப்படியாவது திரைத்துறையில் டாப் அந்தஸ்தை பிடித்து விட வேண்டும் என பல முயற்சிகளை எடுக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 128

    0

    0