அச்சோ ச்சோ கியூட்… ஜூனியர் வேம்புலிடா – வில்லன் நடிகரின் மகனுக்கு குவியும் லைக்ஸ்!
Author: Shree12 August 2023, 11:20 am
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின் நடிகையாக மாறிய பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஜான் கோகென் சார்பாட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். மிகச்சிறந்த நடிகராக பார்க்கப்படும் இவர் அவ்வப்போது மனைவியுடன் ரொமான்டிக்கான நேரத்தை செலவிடும் போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் ஈர்ப்பார்.
இந்நிலையில் இவர்களுக்கு அண்மையில் தான் அழகான மகன் பிறந்தார். அவ்வப்போது மகனுடன் கியூட்டான போட்டோக்களை வெளியிடும் பூஜா, தற்போது சில கியூட்டான போட்டோக்களை வெளியிட லைக்ஸ் பிச்சி உதறியுள்ளது. இதற்கு ஜான் ” மை டார்லிங்ஸ்” என கமெண்ட்ஸ் செய்ய பூஜா ” இப்போ சொல்லு யாரு மாதிரி இருக்கிறான்? என ரிப்ளை செய்துள்ளார். அந்த அழகான போட்டோ இதோ!