நான் இறந்த பின்பும்…. இளம் நடிகர்களை மறைமுகமாக தாக்கிய கமல் ஹாசன்!
Author: Rajesh26 February 2024, 5:45 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன் இன்று உலக நாயகனாக பெயரெடுத்துள்ளார். 69 வயசிலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக டாப் இடத்திலே இருந்து வருகிறார். திரைப்படம், அரசியல், தொகுப்பாளர் என துறைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
தற்போது இந்தியன் 2, தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் சிம்புவின் எஸ்டிஆர் 48 படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு படத்தின் சக்ஸஸ் என்பது என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், என்னை பொறுத்தவரையில் என் மரணத்திற்கு பிறகும் என்னுடைய படங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதைத்தான் தான் நான் சக்சஸாக பார்க்கிறேன்.
ஏனென்றால் ஒரு படத்தின் வெற்றி என்பது வெறுமனே வசூல் மட்டுமல்ல என்பதை கமல் ஹாசன் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இன்று வளர்ந்து வரும் டாப் ஹீரோக்களை தாக்கி கூறப்பட்டுள்ளதாக நெட்டிசன்ஸ் தங்களது கருத்தினை கூறி வருகிறார்கள். மேலும் வளர்ந்து வரும் தற்போதைய இயக்குனர்கள், நடிகர்களுக்கு கமல் ஹாசனின் இந்த பேச்சு ஒரு பாடமாக இருக்கும் என கூறுகிறார்கள்.