மானுடர் அனைவரும் சமம்… மனக்கசப்பை தாண்டி “மாமன்னன்” படம் பார்த்த கமல் ட்விட்!
Author: Shree29 June 2023, 9:53 am
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.
வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இப்படத்தை இயக்கினார். முதல் படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக்கொடுத்தது.
பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் ஒடுக்கப்பட்ட இனத்தையும் ஆதிக்க சாதியினரால் அவர்கள் படும் கொடுமைகளை குறித்தும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மீண்டும் மாபெரும் ஹிட் கொடுத்தார்.
அடுத்ததாக அவர் இயக்கியுள்ள மாமன்னன் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த நடிகர் கமல் ஹாசன், மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள். என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், ” மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல் ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என பதில் ட்விட் செய்தார்.
இதே போல் கமலுக்கு நன்றி கூறிய படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் “பெரும் பிரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என பதிவிட்டு நன்றி கூறியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கமலின் தேவர்மகன் படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ் கமல் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகினர். இதனால் கமலுக்கும் மாரி செல்வராஜுக்கும் பிளவு ஏற்படும் என எண்ணியிருந்த தருணத்தில் மாமன்னன் படத்தை பார்த்து கமல் கருத்து தெரிவித்திருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
என் கருத்திற்கு வலிமை சேர்க்கும்
மாமன்னனுக்கு வாழ்த்துகள்@Udhaystalin @mari_selvaraj #MAAMANNAN https://t.co/gS0L72GbSv