இது நம்ம கலாச்சாரமே இல்ல மச்சான்ஸ்.. தமிழ் புத்தாண்டு குறித்து திடீரென வீடியோ வெளியிட்ட நமீதா..!

Author: Vignesh
13 April 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஒரு நடிகை. மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைப்பார், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஹாய் மச்சான்ஸ் என்று அவர் கூறும் அந்த வார்த்தை ரசிகர்களால் ரசிக்கப்படும்.

சினிமாவில் நுழைந்ததும் கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்த நமீதாவிற்கு அடுத்தடுத்து எந்த நல்ல படங்களும் அமையவில்லை.

ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகர்களாக திகழ்ந்து வரும் சத்யராஜ், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு காரணம், அந்த நடிகர்கள் தனக்கு சமமான உயரத்தில் இருப்பதால் தான் கரெக்டாக இருக்கும் என்று அவர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கதைகளை சரியாக தேர்வு செய்வதில் நமீதா தவறு செய்தும் இருந்தார். இதன்பின் நமீதா உடல் எடையை ஏற்றியதால் கவர்ச்சி பக்கமும் சென்றார். அப்படி தான் அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களுக்கு பின் எந்த வாய்ப்பை பெறாமல் காணாமல் போனார்.

பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வந்தார். பிக்பாஸ் முதல் சீசனிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு நடிகை நமீதா வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

இந்நிலையில் திடீரென வீடியோ வெளியிட்டுள்ள நமீதா, டிசம்பர் 31ஆம் தேதி இரவு நேரத்தில் நாம் நண்பர்கள் உறவினர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுகிறோம் என்றும், அது நமது கலாச்சாரம் அல்ல எனவும், நாம் இந்தியர்கள் நமது இந்திய நாட்டில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுதான் நமது தமிழ் புத்தாண்டு எனவும், தமிழ் புத்தாண்டு தினத்தன்று நாம் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு போய் இறைவனின் ஆசியை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் பெற்றோர்கள், மூத்தவர்களின் ஆசியை பெற வேண்டும் என்றும், புத்தாண்டு தினத்தன்று நாள் முழுவதும் குடும்பத்தோடும் உறவினர்களோடும் இணைந்து தமிழ் புத்தாண்டினை கொண்டாடுங்கள் அதுதான் நமது கலாச்சாரம், பாரம்பரியம் எனவும், எல்லோரும் ஏப்ரல் 14 ஆம் தமிழ் புத்தாண்டினை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுங்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வணக்கம் எனத் நமீதா தெரிவித்து உள்ளார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ