கமல் அதை கூட விட்டு வைக்கல.. – வாலிபத்தில் மன்மதன்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!
Author: Vignesh13 April 2023, 2:30 pm
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது உலக நாயகன் என்ற சகாப்தத்தையே உருவாக்கியுள்ளவர் தான் நடிகர் கமல் ஹாசன்.
70ஸ், 80ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வரும் கமல்ஹாசன். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹெச். வினோத், மணிரத்னம், பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது.
உலக நாயகன் நடிப்பிற்கு உலகம் முழுவதும் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் கமல் எந்த திரைப்படம் நடித்தாலும் அது உலகளாவிய ரீதியில் டாப் 10 க்குள் ஓடும். கமல் நடிக்கும் திரைப்படங்களில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவா இருப்பவர். கமல் அவ்வப்போது வீட்டில் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவார்.
இந்நிலையில், தற்போது இணையத்தில் இவரது வீடியோ தீயாய் பரவி வருகிறது. வீட்டில் அலங்காரத்திற்காக வைத்திருக்கும் ஒரு பாத்திரத்தில் அழகாக தாளம் போட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் கமல்.
இதனை பார்க்கும் போது கமல் எல்லா விசயங்களிலும் அதிகமாக இரசனை கொண்டவராக இருக்கிறார். இதனை பார்த்த கமல் ரசிகர்கள்,“ வரவிற்காக தான் காத்திருகிறோம்” என கருத்துக்களை பதிவிட்டும், வாலிபத்தில் மன்மதன் என கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்கள்.