“சூர்யாவால் எங்க வாழ்க்கையே போச்சு”.. உங்க அண்ணன் மாதிரி இறங்கிடாதீங்க.. கார்த்திக்கு வார்னிங் கொடுத்த ரசிகர்கள்..!!

Author: Vignesh
8 March 2023, 10:30 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதோடு, வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல இலாபத்தையும் பெற்றுக் கொடுத்தது.

அண்மையில் அவர் நடித்து வெளியான சூரரைப் போற்று பல்வேறு விருதுகளை வென்று அசத்தியது. அதேபோல, ஜெய் பீம் படமும் சக்கை போடு போட்டது. இதுபோன்ற வெற்றி படங்களில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது.

surya karthik - updatenews360

தற்போது நடிகர் சூர்யா, வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் தந்தை சிவக்குமார், இவரது மனைவி ஜோதிகா மற்றும் இவரின் தம்பி கார்த்தி என அனைவரும் திரையுலகில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர்கள் தான்.

இதனிடையே, நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி, தன் அண்ணன் குறித்து பேட்டி ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான கருத்தை கூறியுள்ளார்.

surya karthik - updatenews360

அதில் அவர், சூர்யா இதற்கு முன் நடித்த ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் 6 pack வைத்து கொண்டு உடலை கட்டுடன் நடித்திருப்பார் என்றும், இதைப் பார்த்து ஏங்காத, பெண்களே இல்லை எனவும், அந்த வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்த, நடிகர் கார்த்தியை பொதுமக்கள் சிலர் ரவுண்டு கட்டி விட்டதாகவும், அப்போது ரசிகர்கள் சிலர் அன்புடன் வார்னிங் செய்ததாகவும், தெரிவித்துள்ளார்.

surya karthik - updatenews360

இதுகுறித்து நடிகர் கார்த்திக்கிடம் ரசிகர்கள் கூறியதாவது:- உங்க அண்ணன் சூர்யா வால எங்க வாழ்க்கையே போச்சு என்றும், எங்க வீட்டில் எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வைக்க சொல்றாங்க எனவும், உங்க அண்ணன் இப்படி செய்யறது நியாயமா? எனக் காமெடியாக தெரிவித்ததாக நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

surya karthik - updatenews360

அது மட்டும் இல்லாமல் நீங்களும் உங்க அண்ணன் மாதிரி இறங்கிடாதீங்க எனவும், அப்புறம் எங்க பாடு அதோ கதி தான் என அவரை அன்புடன் வார்னிங் செய்ததாகவும், உண்மையிலேயே இதெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் தான் என, நடிகர் கார்த்திக் அந்த பேட்டியில் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!