தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகர் கார்த்தி அப்பா சிவகுமார், அண்ணன் சூர்யா என்ற மிகப்பெரிய திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து தனது தனித்திறமையை நிலைநாட்டி இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பல அறிமுக இயக்குனர்களும் முதலில் இயக்கியது கார்த்தியின் படமாக தான் இருக்கும்.
வித்தியாசமான கதைகளும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கக்கூடிய படங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் கார்த்தி வல்லவர். இதுவே, இவரது தனி திறமையாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு நடிகரின் மார்க்கெட் உச்சம் அடைய வேண்டும் என்றால் அந்த நடிகர் தனக்கு நிகரான இன்னொரு நடிகரை தனக்கு போட்டியாளராக எதிரியாகவும், ரசிகர்கள் மத்தியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அந்த நடிகரின் மார்க்கெட் நல்ல நிலையை அடையும் என்று எழுதப்படாத விதியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.
அந்த வகையில், ரஜினி- கமல், அஜித்- விஜய், விக்ரம் -சூர்யா, சிம்பு- தனுஷ், சிவகார்த்திகேயன் -விஜய் சேதுபதி இப்படி ஒரு நடிகர் தனக்கு நிகரான இன்னொரு நடிகரை போட்டியானவராக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு எதிரியைப் போல ரசிகர்கள் மத்தியில் கட்டமைக்கும் போது அவர்களுடைய மார்க்கெட் நிலையானது ஆகிறது.
மேலும், திரைப்படங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் கூட கார்த்தியின் படங்களில் கிடையாது. கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்ற விடாப்பிடியான கொள்கையில் இருக்கிறார் கார்த்தி.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.