கார்த்திக்கு அந்தப் பிரச்சினை வேற இருந்ததா?.. நவரச நாயகன் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்..!
Author: Vignesh4 ஜூலை 2023, 5:30 மணி
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் முதலில் நடிகராக உருவானது பற்றியும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், கார்த்திக் தன்னுடைய சினிமா கேரியரை எப்படி கெடுத்துக் கொண்டார் என்பது பற்றியும் அந்த வீடியோவில் செய்யார் பாலு பேசியுள்ளார். பொதுவாக இயக்குனர் பாரதிராஜாவின் கதாநாயகன் தேர்வு வித்தியாசமாக தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
உதாரணத்திற்கு மீனாட்சி அம்மன் கோவில் அருகே வளையல் கடை வைத்திருந்த ஒரு சாதாரண வளையல் வியாபாரியை பாண்டியனை மண்வாசனை படத்தில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்தில் அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அதாவது முரளியை கார்த்திக் பொருத்தமாக இருப்பார் என கணித்து தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அவருடைய அப்பா முத்துராமிடம் கேட்டுள்ளார்.
பாராதிராஜா கேட்டால், முடியாது என சொல்ல முடியுமா?.. உடனே முத்துராமனும் சம்மதம் கொடுத்து விட்டார். இப்படித்தான் முதல் படம் அலைகள் ஓய்வதில்லை செம ஹிட் அடித்தது. கொஞ்ச நாட்களில் கார்த்தியின் தந்தை முத்துராமன் இறந்து விட்ட நிலையில் இதனால், கார்த்திக்கு வழிகாட்ட சரியான ஆளில்லாமல் அடுத்தடுத்து படங்களின் கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோல்விய படங்களையே ஒரு சமயத்தில் கொடுத்து வந்தார்.
இதனிடையே, வீட்டில் சும்மா இருந்தவரை நல்லவனுக்கு நல்லவன் படத்தில் மிகவும் சிரமப்பட்டு கார்த்திக்கை மீண்டும் நடிக்க சம்மதிக்க வைத்தது ஏவிஎம் நிறுவனம் தான். பிரபல தயாரிப்பாளர் தமிழ்மணி தயாரிப்பில் எம் எஸ் முரளி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான சோலைக்குயில் படம் பெரும்பாலும், மலை பகுதிகளில் வைத்து படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்திற்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைத்தால், பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் விரும்பியதால் அப்படி தேடி கண்டுபிடித்து நடிக்க வைக்கப்பட்டவர் தான் அந்தப் பகுதி படுகர் இனத்தை சேர்த்த ராகினி. மிகவும் கட்டுப்பாடான பழங்குடி இன மக்கள் படுகர் இன மக்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
ராகினியையும், அவ்வளவு எளிதில் நடிக்க சமதிக்க வைக்கவில்லை. ராகினியும் ஏற்கனவே கார்த்திக் ரசிகையாக இருந்ததால் கொஞ்சம் சிரமப்பட்டு இயக்குனர் பேசி சம்மதிக்க வைத்து நடிக்கவும் வைத்து விட்டார். பெரும்பாலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் கிசுகிசுக்கப்படுவார்கள். அந்த வகையில், கார்த்திக் சோலைக்குயில் படத்தின் போது ராகினியுடன் கிசுகிசுக்கப்பட்டது கோலிவுட் அறிந்த விஷயம் தான்.
ஆனால் அது கிசு கிசுவோடு நிற்காமல் ஜாதி பிரச்சனையும் தாண்டி திருமணத்தில் முடிந்தது. சில நாட்கள் கழித்து ராகினியின் தங்கையும் கார்த்திக் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தியும் மிக வேகமாக பரவியது.
இது குறித்து, ஒரு முறை நிருபர்கள் நடிகர் கார்த்தியிடம் கேட்டபோது, நான் யாரையும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இந்த திருமணம் தன் மனைவியின் சம்மதத்துடன் தான் நடைபெற்றது என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கு பின்னர் மௌன ராகம், அக்னி நட்சத்திரம் போன்ற சிட்டி லைப்ஸ் படங்களிலும் பொன்னுமணி கிழக்கு வாசல் போன்ற கிராமத்து நாயகன் கதையிலும் பட்டையை கிளப்பி ரஜினி கமலுக்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால், மதுப்பழக்கம் சூட்டிங் சரிவர வராத காரணம் போன்றவற்றால் சினிமாவில் தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார் நடிகர் கார்த்திக். ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த நாயகனாக தன்னை காட்டிக்கொண்டதும் அவர்களுக்காக ஒரு கட்சியை ஆரம்பித்ததும், ஒரு சிறந்த நடிகனின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்ததாக அந்த வீடியோவில் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.
0
0