இந்த படம் எடுத்ததற்கு பிரதீப் கண்டிப்பா வருத்தப்படுவார்: பிரபல தமிழ் நடிகர் பேட்டி வைரல்..!
Author: Rajesh19 February 2023, 3:00 pm
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ’யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கார்த்திக் குமார்.

பிரபல தமிழ் நடிகராக வலம் வரும் இவர், ‘லவ் டுடே’ படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், ’10 ஆண்டுகளுக்குப் பிறகு ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் கண்டிப்பாக வருத்தப்படுவார். ‘அடிடா அவள, உதைடா அவள’ என்ற பாடலுக்காக செல்வராகவன் நீண்ட காலத்திற்கு பிறகு வருத்தப்பட்டார். அதேபோல் ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக பிரதீப் நிச்சயமாக ஒருநாள் வருத்தப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.
Love Today Is Wrong Film – #KarthikKumar pic.twitter.com/vla6DKevdb
— chettyrajubhai (@chettyrajubhai) February 17, 2023