என் மனைவி இப்படி இருக்க இதுதான் காரணம்.. கிரேஷின் Boycut ரகசியத்தை வெளியிட்ட கருணாஸ்..!

Author: Vignesh
16 November 2023, 6:15 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்து ஹீரோவானவர் நடிகர் கருணாஸ். இவர் நந்தா திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு காதல் அழிவதில்லை, பாபா, வில்லன், திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அட்டகாசம், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி, ராஜாதி ராஜா, பொல்லாதவன், எந்திரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இசையமைப்பாளராகவும் , பாடகராகவும் சிறந்து விளக்கியிருக்கிறார். இதனிடையே அரசியல் இணைந்துவிட்டார். இவர் “முக்குலத்தோர் புலிப்படை” என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதனிடையே கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கிரேஸ் பாடகியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் இருக்கிறார்கள்.

karunas

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் மனைவியின் ஹேர் கட் ரகசியத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது கிரேஸ் இப்படி இருப்பதற்கு காரணம் நான் தான் திருமணத்திற்கு முன்னர் அவளுக்கும் நீளமான முடி இருந்தது. ஆனால், நான்தான் வெட்டி விட்டேன். பாய் கட் பண்ணினால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் வரும் அதனால்தான் நான் அவரது தலைமுடியை வெட்டி விட்டேன் எனக் கூறியுள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 237

    0

    0