வெளியானது கவினின் ‘DADA’ டீசர்.. உலகத்துல பாதி பிரச்சனைகளுக்கு காரணமே அவங்க தான் : வெல்லுமா தந்தை – மகன் அன்பு…?

Author: Babu Lakshmanan
7 January 2023, 6:06 pm

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து, படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இருப்பினும், சினிமாவில் அவருக்கு எதிர்பார்த்த ரீச் கிடைக்கவில்லை. இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு, தனக்கென ஒரு FAN BASE-ஐ உருவாக்கிக் கொண்டார்.

இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ‘டாடா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ