தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார். அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக நடிகர் கவின் உயர்த்தினாராம். இதன்பின், இவருடைய சம்பளம் ரூ. 3 கோடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரூ. 7 கோடியாக உயர்த்திவிட்டாராம். ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது குறித்து மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உங்கிட்ட வர மாட்டேன் என்று ஒரு கும்பிடு போட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
மேலும், தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வரும் கவின் பிரபல இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் இருக்கும் படத்திலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறாராம். மேலும், சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் கவின் செயல் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த நடிகராக கவின் இல்லை எனவும், எப்போதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக தான் வருகிறார்.
மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!
அப்படி வந்தாலும், அவரது கேரவேனிலேயே, நீண்ட நேரம் இருக்கிறார். சரியான நேரத்திற்கு ஷூட்டிற்கு வருவது கிடையாது. அவர் சரியாக வராமல் இருப்பதால் மற்ற நடிகர்களின் காட்சியை படமாக்கிவிட்டு அவருக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியான அணுகுமுறை சரியில்லை என பதிவு செய்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.