சின்னத்திரையில் பிரபலமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் இதன்மூலம், வெள்ளித்திரையில் சினிமா படவாய்ப்புகளும் அவரது வீட்டு கதவை தட்டின. நட்பு-னா என்னன்னு தெரியுமா..?, லிப்ட் ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது டாடா எனும் படத்தில் நடித்திருந்தார்.
கணேஷ் அறிமுக இயக்குனராக இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்து எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கவினுக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்துள்ளார். பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சிமி, விடிவி கணேஷ் போன்ற பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், முதல்முறையாக கதாநாயகியாக அபர்ணா தாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கவின் பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது :- எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி கவின். சிறந்த சக நடிகராக இருந்ததற்கும் நன்றி. உங்களை எனக்கு ஒரு வருடத்திற்கு மேலாக தெரியும். டாடா படத்தை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்திற்காக நீங்கள் அதிகம் உழைத்ததைப் பார்த்திருக்கிறேன். படத்தின் எந்த துறையாக இருந்தாலும் அங்கு நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.
சில பிரச்னைகள் வரும்போதெல்லாம் அதற்கு எதிராக நீங்கள் போராடி அதை சரி செய்தீர்கள். பல விஷயங்கள் உங்களை கீழே இழுக்க முயன்றன, ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து வலுவாக இருந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். நான் இதனை பேசுவதற்கு ஒரு மேடை கிடைக்கும் போதெல்லாம் நான் இந்த விஷயங்களைச் பற்றி சொல்ல விரும்பினேன்.
ஆனால் என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது, நீங்கள் இல்லை என்றால் இந்த படம் உருவாக்கி இருக்காது. எல்லாவற்றிற்கும் நன்றி. பெரும்பாலான நேர்காணல்களில் நான் உங்களை குறுகிய கோபம் கொண்டவர் என சொன்னேன். ஆனால் நீங்கள் சரியான விஷயங்களுக்காக மட்டுமே போராடி இருக்கிறீர்கள். உங்களுடன் இருப்பேன் : இந்த அழகான திரைப்படத்தை உருவாக்கி அதில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. என்று பதிவிட்டுள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் இருவரும் காதலிக்கின்றனரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.