ஒரு படத்துக்கே ஓவர் சீன் போடும் கவின்… 40 கதை அஸ்வின் லிஸ்டில் சேர்ந்து விடாதீங்க..!

Author: Rajesh
10 March 2022, 4:20 pm

பிக்பாஸில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகர் கவின். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு சிறிய இடத்தை சினிமாவில் தற்போது தக்க வைத்துள்ளார்.

இவர் நடித்த லிப்ட் என்ற திகில் படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றதையடுத்து, 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், மலையாளம் நடிகை அபர்ணா தாஸ் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே சினிமா துறையில் நன்றாக வளர்ந்து வரும் கவின், தன் படங்களில் அந்த நடிகரை மாற்றுங்கள், அந்த நடிகை தான் வேண்டும், என படக்குழுவினர் எடுக்கும் முடிவுகளில் தலையிடுகிறாராம்.

இயக்குனரின் விஷயங்களிலும் தொடர்ந்து மூக்கை நுழைப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சிடைந்துள்ளார்களாம். இவரே இப்போது தான் நடிக்க வந்துள்ளார், வளர்ந்து கொண்டிருக்கும் ஓவர் சீன் போடுவது வேண்டாத வேலை என்று படக் குழுவில் உள்ளவர்கள் கூறி வருகின்றனராம்.

இதைப் போலத்தான் அஸ்வி என்னும் நடிகர் நடந்து கொண்டு தன் பெயரை கெடுத்துக் கொண்டார். அஸ்வின் லிஸ்டில் சேர்ந்து விடாதீர்கள் என அவரது நண்பர்கள் கவினுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனராம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1343

    0

    0