தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார். அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். அதனால் அவரை ரூ. 1 கோடிக்கு கமிட் செய்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியனது. ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது குறித்து மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உங்கிட்ட வர மாட்டேன் என்று ஒரு கும்பிடு போட்டு சென்றுவிட்டனர் என கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.